September 10, 2026

இரவுநேர போதை பார்ட்டியில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள் – சிக்கப் போகும் துணை நடிகைகள்!

போதைப் பொருள் பயன்படுத்தியது, விற்பனை செய்தது தொடர்பாக தயாரிப்பாளர் சர்புதீன் கைது செய்யப்பட்டு காவல்துறையிடம் விசாரணையில் உள்ள நிலையில், சில துணை நடிகைகளும் இந்த வழக்கில் சிக்க உள்ளார்கள்.

அதிரடி சோதனை – சிக்கிய ஆதாரங்கள்

சர்புதீன் வீட்டில் நடைபெறும் பார்ட்டியில் வார இறுதியில் கலந்துகொள்ளும் சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்களுக்கு கொக்கெய்ன், மெத்தம்பெட்டமைன், OG கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

சிம்புவின் நெருங்கிய நண்பர் :-

சிம்பு நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்தவர் ஷர்புதீன். இவர் தான் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் உதவியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன..?

சென்னை திருமங்கலத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தியாகேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த சர்புதீன் என்பவருக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சர்புதீன், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சீனிவாசன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் :-

மேலும், சர்புதீன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 27 லட்சம் ரூபாய் பணம், மூன்று ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மற்றொரு தயாரிப்பாளர் கைது:-

மேலும் எந்தெந்த சினிமா விருந்துகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது? அதில் கலந்து கொண்ட திரை உலகினர் யார்..? யார்..? என்பது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினர் சர்புதீனிடம் விசாரணை நடத்தி பட்டியலை தயாரித்தனர்.

இந்த நிலையில் சர்புதீன் கொடுத்த தகவலின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிக்கப் போகும் துணை நடிகைகள்

தயாரிப்பாளர் சர்புதீன் காவல்துறையிடம் கொடுத்த பட்டியலில், துணை நடிகைகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சில துணை நடிகைகள் இந்த வழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவிடம் விசாரணை என்னாச்சு..?

தயாரிப்பாளர் சர்புரிதீன் நடிகர் சிம்புவின் நெடுங்கிய நண்பர் என்பதால் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துணை நடிகைகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may have missed