September 10, 2026

மகளிர் உலகக் கோப்பை கபடியில் இந்தியா மீண்டும் சாம்பியன்!

மகளிர் உலகக் கோப்பை கபடி தொடரின் இறுதிப் போட்டியில் சீன தைபேவை வென்று இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் இரண்டாவது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டிகள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கின. வங்கதேசம், இந்தியா, சீன தைபே, ஜெர்மனி, ஈரான், கென்யா, நேபாளம், போலந்து, தாய்லாந்து, உகாண்டா, சான்சிபார் ஆகிய 11 நாடுகள் இதில் பங்கேற்றன. லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்தியா, ஈரான், சீன தைபே, வங்கதேசம் ஆகியவை அரை இறுதியில் பங்கேற்றன.

அரை இறுதிப்போட்டியில் ஈரானை 33-21 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது. வங்கதேசத்தை 25-18 என்ற புள்ளிக்கணக்கில் சீன தைபே வீழ்த்தியது. இதனையடுத்து இறுதிப் போட்டியில் இந்தியா- சீனா தைபே அணிகள் களமிறங்கின. இறுதியில் 35-28 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம்  கபடி மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டாவது முறையாக இந்தியா சாம்பியனாகியுள்ளது. வெற்றி பெற்ற இந்திய மகளிர் கபடி அணியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

You may have missed