September 10, 2026

கட்டிடங்கள் குலுங்கின… பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் உள்ள மிண்டனோ தீவில் இன்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த வாரம் பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 69 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இனறு 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed