பாலியல் தொழிலில் பள்ளி மாணவி : பிரபல தமிழ் இயக்குநர் கைது

பள்ளி மாணவி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பிரபல இயக்குநரும், நடிக்குமான பாரதி கண்ணன் விபச்சார பிரிவு தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பாலியல் தொழில் :-

சென்னையில் பல்வேறு விதமான விடுதிகளில் பாலியல் தொழில் நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடகத்தது. இதையடுத்து அதிரடியாக அந்த விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறை ஒன்றில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. அந்தப் பள்ளி மாணவியை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

பாலியல் தொழிலில் பள்ளி மாணவி

விசாரணையில், மாணவி சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் என்பதும், அப்பா இல்லாமல் தற்போது அம்மாவின் தோழி ஒருவர் ஆதரவில் வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து, மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆந்திர மாநில துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் குமார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவியை விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின.

சொகுசு வாழ்க்கைக்காக.. :-

மாணவியின் தந்தை திடீரென இறந்துப்போனதால் அவரது தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்று விட்டார். இதனால் தனிமையில் தவித்த மாணவி சென்னை கே.கே.நகரில் உள்ள தாயின் தோழியான கிளப் டான்சர் பூங்கொடி என்பவரது வீட்டில் தங்கி படித்தார். இவர் அந்த மாதிரியான தொழிலில் ஈடுபடுபவர் என்று சொல்லப்படுகிறது.
ஆதரவற்ற நிலையில் இருந்த மாணவியிடம் பூங்கொடி ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் தள்ளியுள்ளார்.

ஆரம்பத்தில் மறுத்த மாணவி, பின்னர் சொகுசு வாழ்க்கை, பணம், உயர் ரக ஆடை, ஐபோன், விலை உயர்ந்த பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றால் மயங்கினார். இதற்கு மாணவியின் பெரியம்மா மகளான ஐஸ்வர்யா என்பவரும் உடந்தையாக இருந்து வந்து உள்ளார்.

பாரதி கண்ணன் கைது

பூங்கொடிக்கு வசதி படைத்த வாடிக்கையாளர்களை ஏற்பாடு செய்து கொடுத்தது சினிமா பட இயக்குநரும் காமெடி பட நடிகருமான பாரதி கண்ணன் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த கோயம்பேடு அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, பாரதி கண்ணன் மாணவியை தனது சினிமா வட்டாரத்தில் உள்ள பலருக்கு விருந்தாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மாணவியுடன் உல்லாசம் அனுபவித்த நபர்கள் யார்..? யார்..? என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

கைதான திமுக நிர்வாகி :-

மேலும், மாணவியுடன் தொடர்ந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த கட்டுமான நிறுவன ஊழியர் மகேந்திரன், திமுக நிர்வாகி ரமேஷ் மற்றும் பாரதி கண்ணன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்தப் பள்ளி மாணவிகளுடன் உல்லாசத்தில் இருந்த பல முக்கிய புள்ளிகளை காவல்துறை தேடி வருகிறது…

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *