பரபரப்பு… அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக. தலைமை அலுவலகம் உள்ளது. இதற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.