அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மீதான மக்களின் நம்பிக்கை, 37 சதவீதமாக சரிந்துள்ளதாக கருத்துக்கணிப்பு

அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு ஜன.,20ல் டிரம்ப் 2வது முறையாக

பதவியேற்றார். இந்நிலையில் கடந்த வாரம் அதிபர் டிரம்பின் பணி செயல்பாடு, மக்களிடையே உள்ள செல்வாக்கு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

தற்போது வாஷிங்டன் போஸ்ட்-இப்சோஸ் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் அவர் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவரது செல்வாக்கு, 37 சதவீதமாக குறைந்துள்ளது. பதிலளித்தவர்களில் 33% பேர் மட்டுமே அவர் பொருளாதாரத்தைக் கையாண்ட விதத்தை அங்கீகரித்தனர்.

அதே நேரத்தில் 29% பேர் மட்டுமே நடந்துகொண்டிருக்கும் ஈரான் மோதலை அவர் கையாண்ட விதத்தை ஆதரித்தனர். 61% அமெரிக்கர்கள் அவரது செயல்பாடுகளை ஏற்கவில்லை. மேற்காசிய நாடான ஈரான் மீது டிரம்ப் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளதே அவரது ரேட்டிங் குறைய காரணம் என தகவல் வெளியாகி உள்ளது