திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாறையடி, மந்திரமூர்த்தி தெருவில் வசித்து வருபவை ஆவுடையப்பன் என்ற ஆனந்தராஜ் (வயது 38). இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். காலை நேரத்தில் நண்பர்களுடன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றவர், நெல்லை நகர சாலையில் கோயிலின் அருகேயுள்ள தொட்டியில் உட்கார்ந்து இருந்தார்
அப்போது, 2 நண்பர்களுடன் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறி புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு ஆவுடையப்பன் சடலமாக இருந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ஆவுடையப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இதே பகுதியில் இருக்கும் கோட்டையடி பகுதியில் வசித்து வந்த பெயிண்டர் ரஞ்சன் (வயது 30) என்பவருக்கும், ஆவுடையப்பனுக்கும் தகராறு இருப்பது தெரியவந்தது. இந்த முன்விரோதத்தில் ரஞ்சன் தனியாக இருந்த ஆவுடையப்பனை கொலை செய்தது தெரியவந்ததைத்தொடர்ந்து, ரஞ்சனை அதிகாரிகள் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்

More Stories
மதுரை அருகே பரபரப்பு: உளவுத்துறை காவலர் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல் – போலீஸ் தீவிர விசாரணை!
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…
“முதலமைச்சர் விஜய் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்…” – டிடிவி தினகரன்