மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கிழக்கு புறநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், தொலைக்காட்சித் தொடர் நடிகர் ரோஹித் சாந்தல் (29) என்பவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்று கூறப்படும் நிலையில், சிறுமியின் செல்போன் எண்ணிற்கு பல்வேறு எண்களில் இருந்து தொடர்பு கொண்டு ரோஹித் சாந்தல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், கடந்த 5ம் தேதி சிறுமியின் வீட்டின் அருகே அவரைப் பின்தொடர்ந்து சென்று, தகாத வார்த்தைகளால் திட்டி அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் அளித்த புகாரில், ‘ரோஹித் சாந்தல் எனது செல்போன் எண்ணிற்கு தொடர்ந்து தொடர்பு கொண்டு பல்வேறு எண்களில் இருந்து தொல்லை கொடுத்தார்; கடந்த 5ம் தேதி எனது வீட்டிற்கு அருகில் பின்தொடர்ந்து வந்து தகாத வார்த்தைகளால் திட்டி என் மீது தாக்குதல் நடத்தினார்’ என்று தெரிவித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில், நடிகர் ரோஹித் சாந்தல் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தகிசர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்த அவரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீசார் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திரையுலகிற்கு வருவதற்கு முன்பாக, இவர் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்பதும், மாவட்ட அளவில் தற்காப்புக் கலை போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More Stories
செல்போன் பறிப்பு: பள்ளி மாணவன் தற்கொலை: காவலர் சஸ்பெண்ட்…
பெரம்பலூர்: இரூர் கல்குவாரியில் கலெக்டர் ஆய்வு; விதிமீறும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு…
கடலூர்: விதவை பெண்ணை 2வது திருமணம் செய்து 30 பவுன் நகை, ரூ.90 லட்சம் பணம் பறிப்பு: