அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கோட்டியால் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பரம்பரை தர்மகர்த்தாவாக தமிழரசன் என்பவர் இருந்து வருகிறார். கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தமிழரசன் குடும்பத்தினருக்கும், அதே ஊரை சேர்ந்த அறிவழகன் மகன் ரவிக்குமார்(45) குடும்பத்தினருக்கும் பிரச்னை இருந்து வந்தது. ரவிக்குமார் தவெக பிரமுகர். இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஆலோசனையில் ஈடுபட ரவிக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று கோயிலுக்கு வந்தனர்.
அப்போது ரவிக்குமாரிடம் தமிழரசன் மகள் வேம்பரசி(42) கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. நீங்கள் வேண்டுமென்றால் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் போலீசாரிடம் அனுமதி கடிதம் பெற்று வாருங்கள் என்றார்.
இதில் ஆத்திரமடைந்த ரவிக்குமார் மற்றும் சிலர் சேர்ந்து வேம்பரசியை தாக்கினர். இதில் படுகாயமடைந்த வேம்பரசி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். வேம்பரசியை ரவிக்குமார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வேம்பரசி அளித்த புகாரின்பேரில் ரவிக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
இந்தியப் பெண் பேசிய ஆன்லைன் வீடியோ காலால் அதிர்ந்த நெட்டிசன்கள்..! வைரலாகும் வீடியோ!!!
மாற்றுக் கட்சியினருக்கு பதவி வழங்க எதிர்ப்பு; ஆவடி தவெக எம்எல்ஏ ஆபீஸ் முற்றுகை:
சென்னை: வேலையை விட்டுவிட்டு பானி பூரி கடை தொடங்கிய ஐடி ஊழியர்கள்..