திருச்செந்தூரில் கடந்த 20 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய் குறித்து அவர் ஒருமையிலும், அவதூறான வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “தவெகவில் இணையச் சொல்லி என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய சொன்னார்கள். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. திமுகவிலேயே இருப்பேன். அதன் காரணமாகவே நான் கைது செய்யப்பட்டுள்ளேன்” என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்கமாட்டோம். உயர் நீதிமன்றம் முன்ஜாமினை ரத்து செய்யப்பட்டதாலேயே கைது செய்யப்பட்டுள்ளார். தவம் இருந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். தவறு செய்தது யாராக இருந்தாலும் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். முதலமைச்சர் விஜயின் உழைப்புக்கு முன்னால் திமுகவினர் ஒரு பொருட்டே இல்லை.” என்று அவர் கூறினார்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!