அமோனியா வாயு கசிவு விபத்து ஏற்பட்ட ஆலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு வரையிலான பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலையில் தேங்கி நிற்கும் 2 டன் அமோனியாவை வெளியேற்றும் பணி நாளை நடைபெற உள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா தகவல் தெரிவித்துள்ளார்.
பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப் பேர் தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில், கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட 74 வடமாநில தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அமோனியா வாயு கசிவு விபத்தில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஒரு பெண் உட்பட மேலும் பலர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் விமானம் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சூழலில், அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு வரையிலான பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலைக்கு 300 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி இன்று தொடங்க உள்ளது.
இந்நிலையில், வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் இன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து கூறியது, ஆலையில் தேங்கி நிற்கும் 2 டன் அமோனியாவை வெளியேற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் இன்று நடைபெற்று வருகின்றன. அமோனியாவை வெளியேற்றுவதற்கு தேவையான கருவிகளும், நிபுணர் குழுக்களும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் இன்று வரவழைக்கப்பட்டுள்ளனர். அமோனியாவை வெளியேற்றும் பணி நாளை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆலையை சுற்றி 300 மீட்டர் சுற்றளவில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு நாளை விடுமுறை அளிக்க அறிவுறுத்தியுள்ளோம். இங்கு 300 மீட்டர் சுற்றளவிற்குள் குடியிருப்புகள் எதுவும் இல்லை. அதைத் தாண்டி இருக்கும் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். அமோனியாவை கொண்டு செல்லும் வாகனங்களுக்காக நாளை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என்று மாவட்ட கலெக்டர் கவிதா கூறியுள்ளார்.

More Stories
சென்னை: நகை கடைக்குள் புகுந்து 1.5 கிலோ தங்கம் கொள்ளை…
“அரசு வேலைகளை இஷ்டத்துக்கு ஆட்டிப் படைப்பது தவெக அரசின் ஆணவம்” – நயினார் நாகேந்திரன்…
கொலை மிரட்டல் வழக்கில் தவெக அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக புதுவை நீதிமன்றம் உத்தரவு…