குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் 37 பவுன் தங்கக்கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார். குருவாயூர் கோயிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு. அந்த வகையில் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜன்பி. நாயர் தனது குடும்பத்தாருடன் குருவாயூர் கோயிலுக்கு நேற்று 37 பவுன் எடை கொண்ட முத்துகள் பதித்த தங்கக்கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார்.
உச்சிக்கால பூஜைக்கு முன்னதாக கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தங்கக் கொடிமரத்தின் முன்பாக கோயில் மூலவர் சன்னதியில் தங்கக்கிரீடத்தை வழங்கினார். இந்த கிரீடம் குருவாயூர் தேவஸ்தான உறுப்பினர் மனோஜ், கோயில் உதவி நிர்வாகி எம்.ராதா, துணை மேலாளர் ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

More Stories
சென்னை: தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை திருடிய 2 பேர் கைது…
திரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி தந்தாலும் ஆச்சரியமில்லை: ஆர்பி உதயகுமார் …
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் தீ; வைக்கோல் கட்டுகள் எரிந்ததால் பரபரப்பு;