ஆந்திரா மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் 50 டன் தங்கம்! 

ஆந்திரப் பிரதேசம் எதிர்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தி மாநிலமாக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி பகுதியில் மட்டும் சுமார் 50 டன் தங்க இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் தங்க சுரங்கத் திட்ட பணிகள் வேகமெடுத்து வருகின்றன.

ஆந்திரப் பிரதேச சுரங்கத் துறை முதன்மைச் செயலாளர் முகேஷ் குமார் மீனா செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். கர்னூல் மாவட்டத்தின் ஜொன்னகிரி கிராமம், அம்மாநிலத்தின் தங்க வள மையமாக உருவெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அவரது கருத்துப்படி, ஜொன்னகிரி பகுதியில் மட்டும் சுமார் 50 டன் தங்கம் இருப்பதாக ஆரம்ப கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதுதவிர ராமகிரி, ஜவ்வகுலா, சிகுருகுண்டா மற்றும் பிஸ்நாதம் உள்ளிட்ட மேலும் நான்கு பகுதிகளும் தங்க வளம் கொண்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தங்க இருப்பு இதுகுறித்து முகேஷ் குமார் மீனா கூறுகையில், “ஜொன்னகிரியில் மட்டும் 50 டன் தங்க இருப்பு இருக்கலாம் என்று நாங்கள் கணித்துள்ளோம்.

அதனால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவுக்கான மிகப்பெரிய தங்க சப்ளையராக ஆந்திரப் பிரதேசம் மாறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார். தற்போது ஜொன்னகிரியில் வணிக ரீதியிலான தங்க உற்பத்தி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் தங்க சுரங்கத் திட்டத்திற்காக 1,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்

ஆனால் இதுவரை அந்த நிலப்பரப்பில் 500 ஏக்கர் பகுதியில் மட்டுமே முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அப்பகுதியில் சுமார் 13 டன் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,000 ஏக்கர் பகுதியில் இன்னும் விரிவான ஆய்வுகள் தொடங்கப்படவில்லை என்றும், அவை அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வுகள் நிறைவடைந்த பிறகு ஜொன்னகிரியின் மொத்த தங்க இருப்பு 50 டன் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்க உற்பத்தி திறன் தங்க சுரங்கத் தொழில் என்பது மிகப்பெரிய முதலீடும், தொழில்நுட்ப நிபுணத்துவமும் தேவைப்படும் துறையாக இருப்பதால், அரசு நேரடியாக செயல்படாமல் தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் முறையில் சுரங்க உரிமைகளை வழங்கி வருவதாகவும் முகேஷ் குமார் மீனா கூறியுள்ளார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் தங்க உற்பத்தி திறன் குறைந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டிய அவர், முன்பு ஒரு டன் சுரங்கப் பொருளிலிருந்து சுமார் 3 கிராம் தங்கம் கிடைத்த நிலையில், தற்போது அது ஒரு கிராம் அளவுக்கு மட்டுமே குறைந்துள்ளதாக கூறினார். சுரங்கத் திட்டம் அதே நேரத்தில், ஒரு டன் சுரங்கப் பொருளிலிருந்து 0.8 கிராமுக்கு குறைவாக தங்கம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அந்த சுரங்கத் திட்டத்தை பொருளாதார ரீதியாக செயல்படுத்துவது லாபகரமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இதனால் இந்தத் திட்டத்திற்கு அரசியல் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த மாத இறுதிக்குள் ஜொன்னகிரி தங்க சுரங்கத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் தேவை இந்தியாவில் தங்கத்தின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் நாட்டின் அந்நியச் செலாவணி செலவும் அதிகரிக்கிறது. இந்த சூழலில் ஆந்திராவில் கண்டறியப்பட்டுள்ள தங்க வளங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால், உள்நாட்டு தங்க உற்பத்தி அதிகரிப்பதோடு, இறக்குமதி சார்பும் குறைய வாய்ப்புள்ளது. ஜொன்னகிரி கர்னூல் மாவட்டத்தின் ஜொன்னகிரி தற்போது ஒரு சாதாரண கிராமமாக இருந்தாலும், எதிர்காலத்தில் இந்தியாவின் முக்கிய தங்க உற்பத்தி மையமாக மாறும் சாத்தியம் இருப்பதாக சுரங்கத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது