காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் பகுதியில் 30 வயதுடைய பெண்மணி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். வழக்கம்போல தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவர், பெண்ணிடம் தீப்பெட்டி கேட்டு இந்த சமயத்தில், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடவே, பதறிப்போன பெண்மணி பயத்தில் அலறி இருக்கிறார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பாலகிருஷ்ணனை தர்ம அடியால் கதறவைத்து பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த வாலாஜாபாத் காவல்துறையினர், இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும், பெண் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில், பாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
மதுபோதை, கஞ்சாவுக்கு அடிமையாக இருந்த பாலகிருஷ்ணன் தற்போது வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவரின் மீது அடிதடி தொடர்பான வழக்குகளும் உள்ளது. இதனிடையே, தற்போது பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

More Stories
தனிநபர் விமர்சனம் வேண்டாம், தரமான அரசியல் பண்ணுங்க!” — எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி !எக்ஸ்தளத்தில் அறிவுறுத்தல்
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!