வீட்டின் கதவை நள்ளிரவு தட்டி உல்லாசத்திற்கு அழைத்ததும் விசாரணையில் அம்பலம்
சென்னை: மகளிர் உடற்பயிற்சி பெண் பொறுப்பாளரின் பணி நீட்டிக்க வேண்டும் என்றால், என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என மிரட்டிய தவெக செயலாளர் வேம்புலி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஆலந்தூர் மாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை மாநகராட்சியின் 160வது வட்டத்தில் அமைந்துள்ள மகளிர் உடற்பயிற்சி மையத்தின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆட்சியின்போது நியமிக்கப்பட்டவர். தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட வசந்தியை ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் வேம்புலி என்பவர், வசந்தியிடம் ‘நீ இந்த பதவியில் நீட்டிக்க வேண்டும் என்றால், என்னுடன் நீ நெருக்கமாக இருக்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதற்கு வசந்தி மறுப்பு தெரிவித்து கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. அதேநேரம் வசந்திக்கு இந்த பணியால் மாதம் ரூ.12 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்திற்கான ஊதியத்தை வசந்திக்கு கொடுக்க கூடாது என்று தவெக செயலாளர் வேம்புலி பல வகையில் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அதேநேரம், தினமும் மகளிர் உடற்பயிற்சி மையத்திற்கு வந்து, வசந்தியிடம் ‘இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்ைல. உனக்கு வேலை வேண்டும் என்றால் என்னுடன் வா… இல்லை என்றால் வேலை உனக்கு இல்லை’ என் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
எதற்கும் அசராத வசந்தி, தவெக செயலாளர் வேம்புலியின் ஆசைக்கு இணங்கவில்லை. இதற்கிடையே வசந்தியின் வீட்டின் கதவை நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி இடைவேளையில் கடந்த ஒரு வாரமாக தவெக செயலாளர் வேம்புலி தட்டி உல்லாசத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தி, இதை கண்டிக்கவில்லை என்றால், வீட்டின் அருகில் இருப்பவர்கள் என்னை தவறான நபராக கூறுவார்கள் என்று பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தவெக செயலாளர் மீது பாலியல் புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால், அதற்கு வலுவான ஆதாரங்கள் தேவை.
இதனால் போலீசார் வசந்தி வசித்து வந்த தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் மகளிர் உடற்பயிற்சி மையம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து விசாரணை நடத்திய போது, தவெக செயலாளரான வேம்புலி நள்ளிரவு நேரத்தில் ெதருவில் மக்கள் நடமாட்டம் இல்லாத போது, வசந்தியின் வீட்டின் கதவை வந்து ஒவ்வொரு நாளும் தட்டி சென்றது உறுதியானது. மேலும் உடற்பயிற்சி மையத்திற்கும் வந்து வசந்தியிடம் பேசி விட்டு சென்றதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து பரங்கிமலை போலீசார் ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளரான வேம்புலி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பெண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்து தொந்தரவு செய்த தகவலும் தவெக மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து வேம்புலியை தவெக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவான சரவணன், நிர்வாகம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக செயலாளர் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதைதொடர்ந்து வேம்புலியை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

More Stories
ஹோம் டூர் வீடியோவால் வந்த வினை… நகை மற்றும் பணம் கொள்ளை…
ரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்த நபர்…
தவறான சிகிச்சையால் வாலிபர் பலி: போலி கிளினிக் நடத்திய தவெக பிரமுகர் கைது…