நெல்லை மாவட்டம் சுத்தமல்லி மேலக்கரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு ராமலட்சுமி என்ற மகளும், முத்துகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். ராமலட்சுமி கங்கைகொண்டான் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் வாலிபர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் சில நாட்களிலேயே முறிந்த நிலையில் ராமலட்சுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு ராமலட்சுமி மீண்டும் வேறுஒரு நபரை காதலித்ததாகவும் கூரப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பி முத்துகிருஷ்ணன், ராமலட்சுமியை கண்டித்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ராமலட்சுமி காதலனுடன் இரவு நீண்ட நேரம் தொலைபேசியில் பேசியதால் முத்துகிருஷ்ணன், ராமலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு ஆத்திரமடைந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சுத்தமல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவான முத்துகிருஷ்ணனை தேடி வந்தனர். இதையடுத்து 8 மணி நேரத்திற்குள் முத்துகிருஷ்ணனை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் ஆணவக் கொலையா ஏன்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்காவை தம்பி வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
பெண் தலைமை காவலரை மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி இருவர் கைது…
தவெகவினரிடம் இருந்துதான் தமிழ்நாட்டு பெண்களை பாதுகாக்க வேண்டும்: டிடிவி தினகரன் விமர்சனம்…
25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர்: முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!