மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுடையவர், 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து திருப்பூர் ஊத்துக்குளி ரோடு 2ம் ரயில்வே கேட் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.
2வதாக திருமணம் செய்த பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், லாரி டிரைவரின் மனைவி மற்றும் மூத்த மகள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் இளைய மகளான 15 வயது சிறுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது லாரி டிரைவர், தனது மகளான 15 வயது சிறுமியிடம் அத்துமீறி உள்ளார்.
இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே சிறுமியின் தாய், அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More Stories
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்