கோவை அருகே கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வடுகபாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் செங்காளியப்பன் ஆகியோர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது தெரியவந்து உடனடியாக அவர்களை பிடித்து கைது செய்தனர் .மேலும் 20 லிட்டர் கேன்களில் பதுக்கி வைத்திருந்த கள்ளச்சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!