September 10, 2026

காரில் லிப்ட் கொடுத்து மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி பெண் (30). இவர், ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டையில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் மில்லில் வேலையை முடித்து விட்டு வீடு செல்வதற்காக பாச்சிக்கோட்டையில் இருந்து பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது வெட்டன் விடுதி அருகே சென்ற போது காரில் வந்த ஏற்கனவே அறிமுகமான 2 பேர், நாங்கள் உங்க ஊர் வழியாகத்தான் செல்கிறோம். உன்னை இறக்கி விடுகிறோம் என அழைத்து உள்ளனர். இதனை நம்பி பாசமலரும், காரில் சென்று உள்ளார். பின்னர் சற்று தொலைவில் உள்ள குளக்கரை அருகே மறைவான இடத்திற்கு சென்று அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

புகாரின்பேரில் மாரிமுத்து (55) என்பவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கார் டிரைவர் சேகரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

You may have missed