10ஆம் வகுப்புமாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பள்ளி மாணவர்கள்..

10ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்… ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பள்ளி மாணவர்கள்10ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து, மாணவியின் தந்தைக்கு வாட்ஸ் அப்பில் வீடியோவை அனுப்பி 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் செய்யும் செயலா இது? என ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்துகிற வகையில் பள்ளி மாணவர்கள் மூன்று பேரால் பத்தாம் வகுப்பு மாணவி பல கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளார்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் 9ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த மாணவரின் வீட்டிற்கு பக்கத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி வசித்து வருகிறார்.

பள்ளியில் இடை நின்ற மாணவனின் வீட்டிற்கு அவனுடம் படித்த பள்ளி நண்பர்கள் 2 பேர் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் மாணவரின் வீட்டின் அருகில் பள்ளி மாணவி இருப்பதை பார்த்த அந்த மாணவர்கள் இருவரும், பள்ளியை விட்டு இடையில் நின்ற மாணவரிடம் அந்த மாணவி யார் என விசாரித்தனர். அதற்கு அந்த மாணவரும் மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐடி, பேஸ்புக் ஐடி மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் எனக்குத் தெரியும் எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து அந்த மாணவரிடம் இருந்து மாணவியின் instagram ஐடியை வாங்கிய இருவரும், அந்த மாணவியின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்தனர். மேலும், மூன்று பேரும் சேர்ந்து தனியாக ஒரு இன்ஸ்டாகிராம் ஐடியை உருவாக்கி அதன் மூலம் அந்த மாணவிக்கு Friend ரிக்வெஸ்ட் கொடுத்தனர்.

இதனை அந்த மாணவியும் ஏற்று இருக்கிறார். இதன் பிறகு அந்த மாணவிக்கு மெசேஜ் மூலமாக அவர்கள் மிரட்டல் விடுக்கத் தொடங்கினர். மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து அவருக்கு அனுப்பி வைத்தனர். இந்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ஆடைகள் எதுவும் இன்றி வீடியோ, போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும் என அவர்கள் மிரட்டியுள்ளனர். மாணவியும் பயத்தில் அந்த மாணவர்கள் கூறியபடி தனது ஆபாச போட்டோ, வீடியோக்களை எடுத்து அனுப்பி உள்ளார்.

அவற்றை பதிவிறக்கம் செய்த மாணவர்கள், மாணவியின் தந்தையுடைய இன்ஸ்டாகிராம் ஐடியை தேடிப் பார்த்துள்ளார். அவருக்கு இன்ஸ்டாவில் அக்கவுண்ட் இல்லாததை அறிந்து, அவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் மாணவியின் ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி வைத்தனர். சமூக வலைத்தளங்களில் உன் மகளின் ஆபாச வீடியோக்களை பகிராமல் இருக்க வேண்டுமென்றால் 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறி அவர்கள் மிரட்டி உள்ளனர்.

இதைப் பார்த்த அதிர்ச்சியடைய மனைவியின் தந்தை, அந்த மொபைல் எண் யாருடையது என பார்த்தபோது அது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பள்ளி இடை நின்ற மாணவனின் செல்போன் எண் என தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது தனது நண்பர்கள் இரண்டு பேர்தான் சேர்ந்து இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூன்று மாணவர்கள் மீதும் புகார் அளித்தனர். அதன் பேரில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் கூர்நோக்கு மையத்தில் அடைத்தனர். இச்சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.