தமிழகத்தில் வாக்களித்த ‘வெளிநாட்டு குடியுரிமை’ கொண்டவர்கள் கைது …

“வெளிநாட்டு குடியுரிமை கொண்ட நபர்கள் முறைகேடாக வாக்களித்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறை முழுமையான பாதுகாப்புடன் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது” என திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சுமார் 25 நபர்கள் முறைகேடாக வாக்களித்தது கண்டறியப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது.

தவறான அல்லது போலி ஆவணங்கள் மூலம் தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்று காட்டிக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது இவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்த்து, தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறை முழுமையான பாதுகாப்புடன் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகள் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையையும், ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையையும் நேரடியாகப் பாதிக்கிறது.

வாக்கெடுப்புக்கு முன்னும் பின்னும் நடைபெறும் Immigration மற்றும் Emigration குறித்த தகவல்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிவரவுப் பிரிவிடம் உள்ளதால், இந்த மிகப் பெரிய அளவிலான தேர்தல் மோசடி குறித்து சிபிஐ அமைப்பால் மட்டுமே விரிவான விசாரணையை மேற்கொள்ள முடியும்.

எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம், இது குறித்து சிபிஐ-யிடம் புகார் அளித்து, இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய வேண்டுமெனவும், இந்தியத் தேர்தலில் வாக்களித்த அந்த வெளிநாட்டு குடிமக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையம், வெளிநாட்டு குடிமக்கள் இந்தியாவில் வாக்களிப்பதைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுடன், அதற்கான வலுவான ஒழுங்குமுறைகளையும் உருவாக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்​திய நாட்டு குடிமக்​கள் மட்​டுமே இந்​தி​யா​வில் நடைபெறும் தேர்தல்​களில் வாக்​களிக்க முடி​யும். வெளி​நாடு​களில் நிரந்​தரமாகத் தங்​கி​யிருப்​ப​தோடு, அந்த நாட்டு பிரஜை​யாக​வும் மாறி குடி​யுரிமை பெற்​று ​விட்​டால் அவர்​களுக்கு இந்​திய பாஸ்​போர்ட்​டுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த நாடு​களின் பாஸ்​போர்ட்​டு​கள் வழங்கப்​பட்​டு​விடும். அப்​படிப்​பட்ட வெளி​நாட்டு குடியுரிமை பெற்ற இந்​தி​யர்​கள், இந்​தியா​வுக்கு வழக்கம்போல் வந்து சென்று கொண்​டிருக்​கலாம். ஆனால், இந்​தி​யா​வில் நடக்​கும் தேர்​தல்​களில் வாக்​களிக்க முடியாது.

இந்​நிலை​யில்​தான் நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேரவைத் தேர்தலில் வாக்​களிக்க, வெளி​நாடு​களில் வசிக்கும் ஏராள​மான தமிழர்​கள், இங்கு வந்து சொந்​தத் தொகு​தி​யில் வாக்​களித்​த​தாக தகவல் வெளி​யானது. இதுகுறித்து இந்​திய தேர்​தல் ஆணை​யத்​துக்கு தகவல் சென்றது. அவர்​கள் அறி​வுறுத்​தலின்​பேரில் சென்​னை, திருச்​சி, கோவை, மதுரை உள்​ளிட்ட விமான நிலையங்களில் உள்ள குடி​யுரிமை அதிகாரி​கள் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

வெளி​நாடு​களுக்​குச் செல்ல விமான நிலை​யம் வரும் பயணி​களின் கை விரல்​களைக் கண்​காணிக்க உத்தரவிடப்​பட்​டது. வாக்​களித்த அடை​யாள மை இருந்​து, அவர்​கள் வெளி​நாடு வாழ் இந்​திய குடியுரிமை பெற்ற பயணி​யாக இருந்​தால், அவர்​களை விமானங்களில் பயணம் செய்ய அனு​ம​திக்க வேண்​டாம்.

அவர்​களின் விமானப் பயணங்​களை ரத்​துசெய்​து, அவர்களை காவல் நிலை​யங்​களில் ஒப்​படைக்​கும்​படி​ அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்​படி வெளி​நாடு செல்ல சென்னை விமான நிலை​யம் வந்த சில வெளி​நாடு வாழ் இந்​தி​யர்​கள், தேர்​தல் ஆணைய விதி​முறைகளுக்குமாறாக, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களித்​துள்​ளது தெரிய​வந்​தது.

அவர்​கள் சென்னை உள்​ளிட்ட பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள வாக்​குச்​சாவடிகளில் வாக்​களித்​துள்​ளனர். அதே​போல தமிழகத்​தில் உள்ள பல்​வேறு விமான நிலையங்களில் குடி​யுரிமை அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யிலும் பலர் சிக்​கி​யுள்​ளனர். இப்​படி சென்னை உட்பட தமிழகம் முழு​வதும் விமான நிலையங்களில் சுமார் 17 பேர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்​திரேலி​யா, இலங்​கை, கனடா, ஐரோப்பா உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில் குடி​யுரிமை​கள் பெற்றவர்கள் என்​று தெரிய​வந்​துள்​ளது.

வெளி​நாடு​களில் நிரந்தர குடி​யுரிமை பெற்​றிருந்​தா​லும் நடந்து முடிந்த எஸ்​ஐஆர் பணி​களில் இவர்​கள் ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பித்து வாக்​காளர் அடை​யாள அட்டைகளைப் பெற்று வாக்​களித்​த​தாக தெரியவந்துள்ளது. இந்த விவ​காரம் குறித்து முழு விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.