விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து இன்று மாநிலம் முழுவதும் போராட்டத்தை நடத்தியது. இந்நிலையில் மயிலாடுதுறையில் நடந்த போராட்டத்தில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் வெடித்திருக்கிறது. விஜய் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறார். அவருக்கு காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்திருந்தது. இது திமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக திமுகவுடன் காங்கிரஸ் பயணித்து வந்தது. இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டிருந்தது. ஆனால், திமுக ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, விஜய் கூட போயிடலாம் என்று 2ம் கட்ட நிர்வாகிகள் பேச தொடங்கினர். அதேபோல ஆட்சி அதிகாரத்தில் பங்கு விஷயத்தை காதல் சீனியர்கள் சீரியஸாக முன்வைத்திருந்தனர். எனவே தொடக்கம் முதல் காங்கிரஸ்-திமுக இடையே உரசல் போக்கு இருந்திருந்தது. இதனை தொடர்ந்து ரிசல்ட் வந்த பின்னர் விஜய் பக்கம் காங்கிரஸ் சென்றதால் திமுக கடும் அதிருப்தியில் இருக்கிறது. தவெக உடன் கூட்டணிக்கு சென்ற காங்கிரஸ், விஜய்யை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ள ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் கூட இந்த விஷயத்தில் ஆளுநருக்கு எதிராக எதையும் வெளிப்படையாக பேசவில்லை. ஆனால், காங்கிரஸோ பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்த தொடங்கியது.
இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், விஜய்யை முதலமைச்சராக்க ஆளுநர் அனுமதிக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தியிருந்தனர். இப்படி இருக்கையில் மயிலாடுதுறையில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியிருந்தது. போராட்டத்திற்கு வந்த திமுகவினர், காங்கிரஸ் கட்சியினரை தாக்கியிருக்கின்றனர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் கைகலப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. காங்கிரஸின் நடவடிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கடுமையாக விமர்சித்திருந்தார். காந்தி காட்டிய வழியிலிருந்து காங்கிரஸ் விலகி செல்கிறது, இது ஒழுங்கீனமான அரசியல் என சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More Stories
“தங்கம் சவரனுக்கு ரூ.2 லட்சத்தை தொடும்?”.. பேரதிர்ச்சி தகவல்…
ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது…
ரூ.100 கோடி மோசடி செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது…