நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது தமிழகத்தில் ஆட்சியை பிடித்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராகவுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 35 சதவீத வாக்குகளை பெற்று பெரும் சாதனையை படைத்திருக்கிறது.
அதேநேரம் ஆட்சி அமைக்க இன்னும் 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்பதால் மற்ற கட்சிகளிடமிருந்து ஆதரவைப் பெறும் முயற்சியில் தவெக இறங்கியிருக்கிறது. இப்படி தவெகவுக்கு நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போதுதான் தவெக நிர்வாகி ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை காசிமேட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தவெக நிர்வாகி பாம்பு தினேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாம்பு தினேஷ் ஆர்கே நகரில் தவெக வேட்பாளர் மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது..
விஜய் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் அவரின் கட்சியிலேயே ஒருவர் இப்படி செயல்பட்டு வருகிறார். விஜய் இது போன்ற சம்பவங்களை கண்டிப்பதோடு, தன் கட்சி நிர்வாகி இதை செய்தாலும் அவர்கள் மீது கடுமையான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பலரும் கூறி வருகிறார்கள்..

More Stories
அதிமுக உடன் கூட்டணி இல்லை! திமுக திட்டவட்டம்…
பைக் மீது லாரி மோதி விபத்து: முதியவர் பரிதாப பலி..
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ…