தவெக கட்சியை விஜய் தொடங்கி தனது கொள்கைகளை அறிவித்த பின் கடுமையாக விமர்சித்து வந்தார். தமிழ்நாடு தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த தவெகவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த தவெகவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவிய சூழலில், வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அக்கட்சி போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் டெபாசிட் இழந்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள சீமான், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு உளப்பூர்வமான நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More Stories
முதல்வர் விஜய் அதிரடி :அமைச்சர்களுக்கு 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
ஒடிசாவிலிருந்து பைக்கில் 12 கிலோ கஞ்சா கடத்திய 15 வயது சிறுவன் கைது…
ராமநாதபுரத்தில் 7 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு! போலீஸ் விசாரணை…