மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (மே 30) வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் அலகு குத்தி, பறவை காவடி எடுத்து அபிஷேகம் செய்வதற்கு ஊர்வலமாக அதிகாலை முதலே திருப்பரங்குன்றத்தை நோக்கி வந்தனர். சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் திரும்பிய பக்கமெல்லாம் அரோகரா கோஷம் கேட்கிறது.
கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் திரளாக சாமி தரிசனம் செய்தனர். உரிய வசதிகள் செய்து தரவில்லை என சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் குற்றச்சாட்டு சாட்டினார். மயங்கியவர்களுக்குப் போலீசார் முதலுதவி அளித்து வருகின்றனர். 87 பேருக்கு முதலுதவி சிகிச்சை, 2 பேர் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!