September 10, 2026

சென்னையில் 61 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை…

சென்னை வேளச்சேரியில் நடைபயிற்சி மேற்கொண்ட 61 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 பேர் கொண்ட கும்பல் மூதாட்டியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்; 2 பேர் கைது; மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலை எச்.பி.பெட்ரோல் பங்க் அருகில் உள்ள பூங்காவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த 61 வயது மூதாட்டி ஒருவர் நடைபயிற்சிக்காகச் சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கு போதையில் வந்த ஐந்து இளைஞர்கள், மூதாட்டியைப் பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்து மயங்கி விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரைச் சிகிச்சைக்காகச் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்துத் தகவல் அறிந்து வந்த வேளச்சேரி காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஐந்து பேர் கொண்ட போதை கும்பல் மூதாட்டியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக்கைப்பற்றிக் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் மூதாட்டியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது – மற்ற மூவருக்கு போலீசார் வலைவீச்சு.

You may have missed