September 9, 2026

தமிழ்தாடு காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்திய 2025ஆம் ஆண்டிற்கான SI தேர்வு முடிவுகள் மற்றும் இறுதி விடைக் குறிப்புகள் வெளியாகி உள்ளன.


தேர்வு முடிவுகள் :

​2025-ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று நடைபெற்ற SI எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள்,  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

​முடிவுகளைப் பார்க்க:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் பதிவு எண் (Roll Number) மூலம் முடிவுகளைச் சரிபார்க்கலாம்.

​தகுதிப் பட்டியல் (Merit List):

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த கட்டமான உடல் தகுதித் தேர்வுக்குதகுதி பெற்றவர்களின் பட்டியல் PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதி விடைக் குறிப்பு

​முதற்கட்ட விடைக் குறிப்புகள் (Preliminary Answer Key) டிசம்பர் 26, 2025 அன்று வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் ஜனவரி 2, 2026 வரை பெறப்பட்டன. ஆட்சேபனைகளை ஆய்வு செய்த பிறகு, இறுதி விடைக் குறிப்புகளும் தேர்வு முடிவுகளுடன் சேர்த்து தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

உடல் தகுதித் தேர்வு

​எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்ததாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதம்
​உடல் தகுதித் தேர்வு மற்றும் அதனைத்தொடர்ந்து
​நேர்முகத் தேர்வும் நடைபெற உள்ளது.

You may have missed