September 10, 2026

நயினார் நாகேந்திரன் இப்படி பேசலாமா? – சீறிய நடிகை திரிஷா..!

தன்னையும், தவெக கட்சித் தலைவர் விஜயையும் தொடர்புபடுத்தி பேசிய, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா தரப்பு கடும் கண்டனம் தெரிவிதுள்ளார்.

நடிகை திரிஷா கண்டனம்

இதுதொடர்பாக நடிகை திரிஷா தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞர் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நடிகை திரிஷா பற்றி ஊடகங்களில் அருவருப்பான கருத்துகள் பரவி வருகிறது என்றும், மாநில அரசியல் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை வெளியிடுவார் என்று நடிகை திரிஷா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை திரிஷா எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை என்பதையும், அவ்வாறு இருக்கவும் விரும்பவில்லை என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார்.

அவர் இப்படி பேசலாமா..?

மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதப் பொருளாக மாற்றக்கூடாது என்பது பொதுவான கூற்று, அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது விவாதத்தில் பொறுப்பையும் சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை திரிஷாவின் பெயர் அவரைப் பற்றி கவலைப்படாத விஷயங்களில் சேர்க்கப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் நடிக்கிற மெத்த என்ன தரப்பில் அவரது வழக்கறிஞர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு..!

நடிகை த்ரிஷா தரப்பில் இருந்து நயினார் நாகேந்திரனுக்கு எதிராக அறிக்கை வெளியான பிறகு நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

You may have missed