யார் இந்த மருதநாயகம் ?
“மருதநாயகம்” என்பது வெறும் படத்தின் பெயர் மட்டுமல்ல. அது ஒரு வரலாறு, ஒரு சகாப்தம். சுந்தரப் போராட்ட வீரராக கருதப்படும் மருதநாயகம் என்பவர், முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட நபர். பிறகு அவரே! பிரிட்டிஷ் அடக்குமுறைக்கும்; ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடி, இறுதியில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார்.
‘மருதநாயகம்’ சுதந்திரப் போராட்டத்துக்கு முந்தைய காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக குரல் கொடுத்த தைரியசாலி ஆவார்.

திரைப்படமாக்கும் முயற்சியில் ‘மருதநாயகம்’
மருதநாயகம் பற்றிய முழு நீள திரைப்படத்தை, அதுவும் அவர் பெயரிலே எடுக்க கமல்ஹாசன் முற்பட்டார். அவரின் முயற்சி இன்னும் வெற்றி அடையவில்லை. அது மட்டும் நடந்திருத்தால், தமிழ் சினிமாவுக்கு ஒரு அங்கீகாரமாக இப்படம் அமைந்திருக்கும்.

பிரமாண்ட தொடக்க விழா:-
இந்தப் படம் 1997-ல் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவில், கமல்ஹாசனுடன், இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், இங்கிலாந்தின் இளவரசர் சார்ல்ஸும் கலந்து கொண்டார்கள்.
ஆனால், பல காரணங்களால், பொருளாதார சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சவால்களால் இந்த படம் இன்னும் முடிக்கப்படவில்லை. படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருந்தது. இப்படம் இந்திய சினிமாவுக்கே புதிய முயற்சி தான்.

படத்தில் நடித்தவர்கள்
படத்தில் கமல்ஹாசன், கஸ்தூரி, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திறகு இசை இளையராஜா. தயாரிப்பாளர் கமல்ஹாசன் தான்.

காத்திருக்கும் ரசிகர்கள்
பல ஆண்டுகள் கடந்தபோதும், மருதநாயகம் படம் குறித்து மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இது இன்னும் திரைக்கு வராத ‘லெஜெண்டரி’ திரைப்படமாகவே பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் கனவுப் படைப்பாக இது இன்று வரை நினைவுகூரப்படுகிறது.

கமல்ஹாசன் கொடுத்த ‘அப்டேட்’
இந்நிலையில் மருதநாயகம் படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ‘அப்டேட்’ ஒன்றை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அதாவது, இந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், அந்த ஆசை தனக்கும் இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் ‘மருதநாயகம்’ சாத்தியப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








