மறந்திடாதீங்க… வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று, நாளை சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் (டிச.28,29) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளுக்கு (எஸ்ஐஆர்) பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.…
கடைக்கு வந்த போலீஸார் மீது திடீரென துப்பாக்கிச்சூடு: அடுத்து நடந்த அதிரடி!
கடையில் திடீரென மர்நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் வடகரோலினாவின் சார்லட் புறநகர் பகுதியில் உள்ள மின்ட் ஹில்லில் ஒரு கடையில் நடந்த நிகழ்ச்சி காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த…
சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் தங்க கவச அங்கி அணிவிப்பு- இன்று மண்டல பூஜை
சபரிமலையில் மண்டல பூஜையின் உச்ச நிகழ்வாக இன்று (டிசம்பர். 27) ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து…
இடைநிலை ஆசிரியர்கள் கைது: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
இடைநிலை ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சம வேலைக்கு சம…
ஆர்.நல்லகண்ணு 101-வது பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு அவர்களின் 101வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 26)…
தமிழக சட்டமன்றம் ஜனவரி 20-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
2026-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 20-ம் தேதி தொடங்குகிறது சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று(டிசம்பர் 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” 2026-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்,…
பாமக அடிப்படை உறுப்பினரிலிருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஜி.கே.மணி இன்று (டிசம்பர் 26) முதல் நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் உள்ள பாமக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில்,” பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம்…
கனடா பல்கலைக்கழக வளாகம் அருகே இந்திய மாணவர் சுட்டுக் கொலை!
கனடாவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மருத்துவப் படிப்பு படித்து வந்த இந்திய மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில், டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகம் அருகே உள்ள ஹைலேண்ட் ஓல்ட் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில்…
‘அன்புமணிக்கு கடைசி எச்சரிக்கை’: வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்!
பாமக பெயர், கட்சி சின்னம், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லையென ராமதாஸ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு நான்கு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, சீட்டு பேரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், பாட்டாளி…
வங்கதேசத்தில் மீண்டும் பயங்கரம்…இந்து இளைஞர் அடித்து கொலை
வங்கதேசத்தில் மீண்டும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறை அதிகரித்துள்ளது. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி என்பவர் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.…





