2026 கல்வியாண்டிற்கான விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு இன்று (ஏப்ரல் 28) தொடங்கி மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் சுமார் 129 நகரங்களில் உள்ள 212 மையங்களில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
துபாய், அபுதாபி, கத்தார், மஸ்கட், பஹ்ரைன், குவைத், சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா உள்ளிட்ட 9 நாடுகளில் விஐடி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் நுழைவுத் தேர்வு முடிவுகள் www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் 5 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும். வேலூர் வளாகத்தில் இன்று நடைபெற்ற நுழைவுத் தேர்வை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி மற்றும் மாணவர் சேர்க்கை இயக்குநர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு