April 26, 2026

+2 முடித்தவர்கள் இலவச கல்வி பயில சூப்பர் வாய்ப்பு… மெட்ராஸ் பல்கலைக்கழகம் அறிவிப்பு…

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்கும் நோக்கில் University of Madras 2026–27 கல்வியாண்டிற்கான இலவச கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் பல கல்லூரிகளில் கட்டணமின்றி இளங்கலை படிப்புகளைப் பயில வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் 2025–26 கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரை இழந்தோர், ஆதரவற்றோர், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளை முன்னேற்றுவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.

விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்தைத் தாண்டக்கூடாது. அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் மட்டுமே இந்த சலுகை பொருந்தும். வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் முழுவதும் ஆன்லைன் முறையில் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.unom.ac.in மூலம் மட்டுமே ஏற்கப்படும். மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்; தவறான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். ளஸ் 2 முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி தேதி மே 23, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், பொருளாதார சிரமம் காரணமாக கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது.