கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் மிகப்பெரிய முதலீட்டை செய்யத் தயாராகி வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் அன்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீடு ஏஐ துறையில் நடைபெறும் கடுமையான போட்டியை தெளிவாகக் காட்டுகிறது. கூகுள் ஜெமினி என்ற ஏஐ தளத்தை வைத்திருக்கும் நிலையில் போட்டி நிறுவனமான அன்த்ரோபிக் மீது முதலீடு செய்கிறது. எப்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்ததோ அதேபோல் கூகுள் Anthropic நிறுவனத்திற்கு ஏற்கனவே பல்வேறு சேவைகளை அளிக்கும் முக்கிய சப்ளையராக இருக்கும் நிலையில் தற்போது முதலீட்டாளராகவும் உயர உள்ளது.
இந்த 10 பில்லியன் டாலர் முதலீட்டை அன்த்ரோபிக் நிறுவனத்தை 350 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளது. மேலும் அன்த்ரோபிக் சில இலக்குகளை அடைந்தால், கூகுள் மேலும் 30 பில்லியன் டாலர் வரை கூடுதல் முதலீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்துடன் கூட, கூகுள் அன்த்ரோபிக் நிறுவனத்துக்கு தேவையான பெரிய அளவிலான கம்ப்யூட்டிங் பவர் வழங்கும். ஏஐ மாடல்களை பயிற்றுவிக்கவும் இயக்கவும் இந்த கம்பியூட்டிங் பவர் மிக முக்கியம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நீடிக்கும்.

அன்த்ரோபிக் நிறுவனம் தற்போது ஏஐ உலகில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ‘கிளாட் கோட்’ (Claude Code) என்ற அதன் சிறப்பு கருவி ஒட்டுமொத்த மென்பொருள் துறையை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது. சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கு வேகமாக கோட் எழுத உதவுகிறது. இந்த வெற்றியால் அமேசான் ஏற்கெனவே இந்நிறுவனத்தில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. வரும் காலத்தில் 20 பில்லியன் டாலர் வரை கூடுதல் முதலீடு செய்யவும் தயாராக உள்ளது அமேசான்.
கூகுள் நிறுவனமும் அன்த்ரோபிக் நிறுவனத்திற்கு முதலீட்டை தாண்டி ஒருபுறம் உதவி செய்து வருகிறது. அன்த்ரோபிக் கூகுளின் கிளவுட் சேவைகள் மற்றும் ஏஐ சிப்களை பயன்படுத்துகிறது. இது கூகுளின் கிளவுட் வியாபாரத்தை வளர்க்க உதவுகிறது. ஆனால் மறுபுறம் இரு நிறுவனங்களும் ஏஐ துறையில் கடுமையான போட்டியாளர்களாகவும் உள்ளன.
டிசிஎஸ், இன்போசிஸ், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்களும் ஏஐ-இல் பெரும் தொகையை செலவழித்து வருகின்றன. ஏஐ கருவிகள் மூலம் புதிய வேலைகள் உருவாகலாம், இதேவேளையில் காலம் காலமாக செய்து வரும் பழைய வேலைகள் மாறலாம் அல்லது குறையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

More Stories
100 சதவீதம் ஓட்டுப்பதிவு… வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் பாராட்டு
தெற்கு ரயில்வேயின் மெகா பிளான்… முன்பதிவு இல்லாமலே நெல்லைக்கு போகலாம்…
மதுரையை நோக்கி சீறிபாய்ந்து வரும் தண்ணீர்… கள்ளழகருக்காகத் திறக்கப்பட்ட வைகை…