தமிழக அரசு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விருதுகளை வழங்குகிறார்.
சிறந்த திரைப்படங்கள் (முதலிடம்)
ஒவ்வொரு ஆண்டிற்கும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய அல்லது கலைநயம் மிக்க படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- 2016: மாநகரம்
- 2017: அறம்
- 2018: பரியேறும் பெருமாள்
- 2019: அசுரன்
- 2020: கூழாங்கல்
- 2021: ஜெய்பீம்
- 2022: கார்கி
சிறந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள்
சிறந்த இயக்குநர்கள்
லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் போன்ற தற்கால முன்னணி இயக்குநர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
- 2016: லோகேஷ் கனகராஜ் (மாநகரம்)
- 2017: புஷ்கர் – காயத்ரி (விக்ரம் வேதா)
- 2018: மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)
- 2019: ஆர். பார்த்திபன் (ஒத்த செருப்பு சைஸ் 7)
- 2020: சுதா கொங்கரா (சூரரைப் போற்று)
- 2021: டி.ஜே. ஞானவேல் (ஜெய்பீம்)
- 2022: கௌதம் ராமச்சந்திரன் (கார்கி)

சிறந்த நடிகர்கள்:
- 2016 – விஜய் சேதுபதி -புரியாத புதிர்
- 2017 – கார்த்தி – தீரன் அதிகாரம் ஒன்று
- 2018 – தனுஷ் – வட சென்னை
- 2019 -ஆர். பார்த்திபன் – ஒத்த செருப்பு சைஸ் 7
- 2020 – சூர்ய – சூரரைப் போற்று
- 2021 – ஆர்யா – சார்பட்டா பரம்பரை
- 2022 – விக்ரம் பிரபு – டாணாக்காரன்

சிறந்த நடிகைகள்:-
- 2016 – கீர்த்தி சுரேஷ் – பாம்பு சட்டை
- 2017 – நயன்தாரா – அறம்
- 2018 – ஜோதிகா – செக்கச் சிவந்த வானம்
- 2019 – மஞ்சு வாரியர் – அசுரன்
- 2020 – அபர்ணா பாலமுரளி – சூரரைப் போற்று
- 2021 – லிஜோ மோல் ஜோஸ் – ஜெய்பீம்
- 2022 – சாய் பல்லவி – கார்கி
சிறப்பு விருதுகள் அறிவிப்பு
2016: எஸ். குரு சோமசுந்தரம் (ஜோக்கர்) & அதிதி பாலன் (அருவி).
2017: மாதவன் (விக்ரம் வேதா – சிறந்த வில்லன் விருது ரகுமானுக்கு வழங்கப்பட்டுள்ளது).
2019: கார்த்தி (கைதி – சிறப்பு விருது)
பரிசுத் தொகை :-
விருது மற்றும் பரிசு விவரங்கள்
சிறந்த நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த திரைப்படங்களுக்கு:
- முதல் பரிசு: ₹2 லட்சம்
- இரண்டாம் பரிசு: ₹1 லட்சம்
- மூன்றாம் பரிசு: ₹75,000
- பெண்களை உயர்வாகச் சித்தரிக்கும் படங்களுக்கு சிறப்புப் பரிசாக ₹1.25 லட்சம் வழங்கப்படுகிறது (உதாரணம்: 2016 – அருவி, 2017 – தர்மதுரை).






