விருநுநகர் தெற்கு மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி் நடைபெற்றது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.
தமிழர் திருநாளான பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு வழங்கியுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் கிடைத்துள்ளது.
திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
இந்தவகையில், விருதுநகர் தெற்கு மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில்,
வெம்பக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயபாண்டியன், திமுக மேற்கு ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன், ஒன்றிய துணைச் செயலாளர் சந்தனம், திமுக ்தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கணேசன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நேரில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள், “தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை கடைசி நபர் வரை கொண்டு செல்லும் நோக்கில் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக” தெரிவித்தனர்.







