September 10, 2026

‘காமராஜர் பேத்தி’ உட்பட பலரும் இணைந்த தவெக – முழு விவரங்களும் அடுத்த அரசியலும்

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், இன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியில் இணைத்துள்ளனர். இது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

​அனுபவம் வாய்ந்தவர்களின் வருகை
​இன்று கட்சியில் இணைந்தவர்களில், நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளை வகித்த முக்கிய நிர்வாகிகள் அடங்குவர். இதனால், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக-வில் இணைந்த காமராஜரின் பேத்தி

முன்னாள் முதல்வர் “கர்மவீரர்” காமராஜர் பேத்தி “மயூரி” திமுகவில் இருந்து விலகி, விஜய் முன்னிலையில் தவெக கட்சியில் இணைந்து கொண்டார்.

​அரசியல் களத்தில் இது இணைப்பு காலம்

சினிமா இயக்குனர் ஜெகதீச பாண்டியன், நடிகை ரஞ்சனா நாச்சியார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இதில் அடங்குவர். அந்த பட்டியலை விரிவாக பார்ப்போம்..!

தவெக கட்சியில் இணைந்தவர்கள்

தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க. வர்த்தகர் அணி அமைப்பாளர் சுந்தர பாண்டியன், ஒட்டன்சத்திரம் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம், புதுச்சேரி முன்னாள் ஐ.ஜி.ராமச்சந்திரன், நடிகை ரஞ்சனா நாச்சியார், டைரக்டர் ஜெகதீச பாண்டியன், புதுவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, திருவள்ளூர் அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவர் பாஸ்கரன், வேலா ராமமூர்த்தி மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க.வை சேர்ந்தவர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார்கள்.

குறிப்பாக, இளைஞர்களைக் கவரும் வகையிலான கட்சியின் நடவடிக்கைகள், இந்த இணைப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று அரசில் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


​அரசியல் தாக்கம்

​இந்த இணைவுகள், தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. நீண்டகாலமாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கட்சிகளுக்கு, தவெகவின் வளர்ச்சி ஒரு சவாலாக மாறக்கூடும் என்று தெரிகிறது.

பொங்கலுக்குப் பிறகு தவெக

பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தில் “அதிமுக, திமுக”வை சேர்ந்து முக்கியமான நபர்கள் இணைய உள்ளதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் குடியிருப்பது குறிப்பிடத்தக்கது

You may have missed