சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்ததால், ஒரு சவரன்.1,04,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை 1 லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. உலக தங்க கவுன்சில் கணிப்பின்படி 2026 இறுதிக்குள் 2 லட்ச ரூபாயை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல் கடந்த வாரம் புதிய உச்சத்தைத் தொட்டது. வாரத தொடக்கத்தில் 1,560 ரூபாய்க்கு தொடங்கிய சவரன் விலை வார இறுதியில் 1,04,800 ரூபாயை எட்டியது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 29) சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் குறைந்து 13,020 ரூபாய்க்கும், ஒரு சவரன் 640 ரூபாய் குறைந்து 1,04,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்துக்கு இணையாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 4 ரூபாய் குறைந்து 281 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2,81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





