September 10, 2026

ஆர்.நல்லகண்ணு 101-வது பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு அவர்களின் 101வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 26) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்,” தியாகத்தின் பெருவாழ்வு, தோழர் நல்லகண்ணு ஐயா 101-வது பிறந்தநாள். விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

You may have missed