November 2, 2026

பேய் பிடித்திருப்பதாகக் கூறி பெண்ணுக்கு பாலியல் கொடுமை – பூசாரிக்கு 7 ஆண்டுகள் சிறை!

கேரளா:

கணவரின் உடலில் தீய ஆவி இருப்பதாகக் கூறி, அதனை விரட்டுவதாக நம்ப வைத்து பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், அவரது கணவரின் உடலில் தீய ஆவி இருப்பதாகவும், அதனை விரட்டுவதற்குச் சிறப்புப் பரிகாரங்கள் மற்றும் சடங்குகள் செய்ய வேண்டும் என்றும் ராஜேஷ் என்ற பூசாரி கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்தப் பெண், பூசாரி கூறிய இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துச் சென்ற ராஜேஷ், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்திற்குப் பிறகும், அந்தப் பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஷாஜஹான், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் ராஜேஷைக் குற்றவாளி என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

You may have missed