மதுரை தி ஹானஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு: ரூ. 25,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

மதுரை:

மதுரை ஹோட்டல் பிரேம் நிவாசில் ‘மதுரை தி ஹானஸ்ட்’ அரிமா சங்கத்தின் (Honest Lions Club) ஆறாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜூலை 30 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

​இவ்விழாவில், அரிமா சங்கத்தின் முன்னாள் ஆளுநர் PDG. Lion. R. மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டு, புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

​அதனைத் தொடர்ந்து, சங்க உறுப்பினர்களின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு ரூ. 25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

​இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வுகளையும் சங்கத்தின் பொருளாளர் Lion. V. சரவணன் அவர்கள் மிகச் சிறப்பாக முன்னின்று நடத்திச் செய்தார். விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்து சங்கத்திற்குப் பெருமை சேர்த்த அவருக்கு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.