நீட் மறுதேர்வு வினாத்தாளை வழங்குவதாகக் கூறி ரூ.1.50 கோடி வசூலித்த 2 பேரை அகமதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர். நாடு முழுவதும் மே 3 அன்று நடந்த நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதால் வரும் ஜூன் 21 அன்று மறு ேதா்வு நடைபெற உள்ளது. இந்த மறுதேர்வுக்கான வினாத்தாளை டெலிகிராம் சேனல்கள் மூலம் வழங்குவதாகக் கூறி மாணவர்களை ஏமாற்றியதாக ராஜஸ்தானின் கோட்டா நகரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிரைவேட் மபியா என்ற பெயரில் எட்டு டெலிகிராம் சேனல்களை உருவாக்கி, நீட் மறுதேர்வு வினாத்தாள்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவற்றை வழங்க முடியும் என்றும் பொய்யான விளம்பரங்களை வெளியிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் சுமார் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அவர்கள் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சுமர் சிங் மீனா மற்றும் கோட்டாவைச் சேர்ந்த ஆகாஷ் மீனா ஆகியோர் என்பதும் ெதரிய வந்துள்ளது. இதே போல் பீகாரின் கயா நகரைச் சேர்ந்த நவீன் யாதவ் என்பவர், நீட் இணையதளத்தில் உள்ள சுமார் 150 தேர்வர்களின் கணக்குகளை அணுகி மே 3 அன்று நடைபெறவிருந்த அசல் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசு வழங்கிய தேர்வுக்கட்டணத் திரும்பப் பெறும் தொகையைத் தனது கணக்கிற்கு மாற்றியதாகவும் குற்றம் சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

More Stories
மதுரையில் வீடியோ ஆதாரங்களுடன் மிரட்டப்பட்ட 22 வயது இளம்பெண்:
தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி உயிரிழப்பு…
அமைச்சர் ஷாஜகான் மன்னிப்பு கேட்கக் கோரி திமுகவினர் போஸ்டர்: தஞ்சையில் பரபரப்பு…