September 10, 2026

கத்தி முனையில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்:

 மதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முத்துமணி (37). கார் ஷோரூம் மெக்கானிக். கடந்த அக்டோபர் மாதம் பிளஸ் 2 மாணவியான 17 வயது சிறுமியின் வீட்டிற்குள், பெற்றோர் இல்லாத நேரத்தில் முத்துமணி சென்றுள்ளார். சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவர், இதை வெளியே சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, நடந்தவை குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அவரை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி 7 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது உண்மை நிலவரம் தெரிந்தது. இதுகுறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து மெக்கானிக் முத்துமணியை கைது செய்தனர்.

You may have missed