திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு வாரமாக பத்திரப்பதிவு செய்து தரவில்லை என கூறி கூலித் தொழிலாளி தம்பதியினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்டம் வளாகத்தில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள், நிலம், காலி மனைகள், பத்திரப்பதிவு மற்றும். அடமானம் ஏற்கனவே அடமானம் போடப்பட்ட பத்திரங்களை மீட்கவும், வில்லங்கச் சான்றிதழ்கள் உயில்கள், தடையில்லா சான்றுகள் உள்ளிட்ட பல்வேறு பத்திர பதிவுகள் சார்பதிவாளர் அலுவலகத்தில் செய்கின்றனர் . இதில் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பத்திர பதிவுக்கு செல்லும் ஆவணங்கள் நிலுவையில் வைக்கப்பட்டு ஆவணங்களில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தும் அலைக்கழிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இடைத்தரகர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் ஆவணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் விரைவாக முடிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சிலர் எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஈஸ்வரி (45), என்பவர் தனக்கு சொந்தமான 1300 சதுர அடி கொண்ட இடத்தை கடந்த 2023ம் ஆண்டு வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்களாம். இதை தொடர்ந்து ஈஸ்வரி தற்போது அதே நபரிடம் வாங்கிய தொகையை கொடுத்துவிட்டு மீண்டும் அந்த இடத்தை தன்னுடைய பெயருக்கு பத்திரம் செய்வதற்காக கடந்த வாரம் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார்.
ஆனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என சார்பதிவாளர் ஊழியர்கள் தொடர்ந்து இரண்டு வாரமாக அலைக்கழித்து வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் சார்பதிவாளர் அலுவலகம் நுழைவாயில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் சம்மதம் தெரிவித்தாலும் கூட அதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் ஹெட் கிளாக் சம்மதம் தெரிவிக்கவில்லை என ஈஸ்வரி குற்றச்சாட்டினார். இதுகுறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

More Stories
வீட்டில் பீரோவை உடைக்காமலேயே 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம் திருட்டு …
அரசு பஸ் பழுதால் அடர்ந்த வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்: 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்துசென்ற அவலம்…
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?