September 10, 2026

லாரி டிரைவர்களிடம் வசூல் எஸ்எஸ்ஐ, 2 ஏட்டு சஸ்பெண்ட்…

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி டிரைவர்களிடம் ஹைவே ரோந்து போலீசார் கட்டாய பணம் வசூலில் ஈடுபட்டனர். இந்த பணம் வசூலிப்பு சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.

பின்னர் பணம் வசூலித்த போலீசாரை சஸ்பெண்ட் செய்ய, எஸ்பி மகேஸ்வரனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணையின்படி எஸ்எஸ்ஐ செல்வபதி, ஏட்டுகளான வெங்கடேசன், பரதன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

You may have missed