பாஜகவையும்; மோடியையும் குறிப்பிடப்படுவதாக சொல்லப்படும் “வாரணாசி” படத்தலைப்பை ஏன் இயக்குநர் ராஜமௌலி வைத்தார்? என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்து வருகிறது.

வாரணாசி

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடித்துவரும் படத்திற்கு ‘வாரணாசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘வாரணாசி’ என்பது பிரதமர் வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதி ஆகும்.

பட சர்ச்சை – கிசு..கிசு..

இந்தப் பெயரை அறிவித்த உடனே பல்வேறு சர்ரச்சைகள் எழுந்து வருகிறது. தெலுங்கு பட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்கள் “இந்துத்துவா; ஆர்எஸ்எஸ்(RSS)” ஆதரவாளர் என்று பேசப்பட்ட நிலையில் அது தற்போது நிரூபணம் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசு… கிசுக்கப்படுகிறது.

அதே சமயத்தில் இவ்வளவு நாட்கள் மறைமுகமாக பாஜக கட்சியையும்! ஆர்எஸ்எஸ் கொள்கைகளையும்! ஆதரித்து வந்த இயக்குனர் ராஜமௌலி தற்போது வெளிப்படையாகவே அறிவித்து விட்டார் என்றும் விமர்சனங்கள் வருகிறது.

டீசர் எப்படி இருக்கு?

சுமார் 3.40 நிமிடங்கள் கொண்டுள்ளது வாரணாசி படத்தின் டைட்டில் டீசர். 6-ம் நூற்றாண்டின் வாரணாசி உடன் டீசர் தொடங்குகிறது. கங்கை நதியின் விடியலில் வாரணாசி ஜொலிக்கிறது. இந்தப் படத்திலும் வி.எப்ஃ.எகஸ் (VFX) காட்சிகள் பிரமாதம். அங்கிருந்து 2027-ம் ஆண்டில் பூமியின் மீது எரிகல் ஒன்று விழுகிறது.

அண்டார்டிகாவின் ராஸ் பனி அடுக்கு, ஆப்பிரிக்காவின் கென்யாவில் உள்ள தேசிய வனவியல் பூங்கா, த்ரேதா யுகத்தில் இலங்கை நகரம், பின்னர் மீண்டும் வாரணாசியின் மணிகர்ணிகா காட் பகுதி என அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது. சற்று புரிந்தும் புரியாதது போல் உள்ளது.

அதன் பின்னர் காளை மீது நாயகன் மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

வெடித்தது சர்ச்சை

மொத்தத்தில் இந்த படத்திற்கு மறைமுகமாக பாஜக அரசின் ஆதரவு இருக்கும் என்றும், மத்திய சர்க்காரில் உள்ள அமைச்சர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றும் தெலுங்கு சினிமா பட வட்டாரத்தில் பேசப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.