சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’தள பக்கத்தில் மீண்டும் திமுக
தான் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நான் அளித்த பதிலுரை, ஆளுநருக்கே அளித்த விளக்கவுரையாக, 5 ஆண்டு சாதனை அறிக்கையாக அமைந்துவிட்டது! என்று பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாடு ‘நம்பர் 1’ என நாம் ஆளுநர் உரையில் குறிப்பிட்டதில் ஆளுநர் ரவி அவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமேயானால் அவர் ஒன்றிய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும்.
ஏனென்றால், நாம் சொன்னது அனைத்தும் ஒன்றிய அரசு அளித்த தரவுகள்தான் என்றும்,
2021-ல் நிர்ணயித்த இலக்கில் வென்றுவிட்டோம்! இனி 2026-லும் #வெல்வோம்_ஒன்றாக! என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.






