மதுரையில் இன்று ரூ.4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைதொடரந்து, மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி “வணக்கம்” எனக்கூறி தனது உரையை தொடங்கினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 9 வந்தே பாரத் ரெயில் வழங்கப்பட்டது, புதிதாக 77 ரெயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி பேசினார்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு:-
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.880 கோடி, பாஜக ஆட்சியில் ரூ7600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டி பேசினார்
3 மடங்கு அதிகரிப்பு:-
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் 1,300 கி.மீக்கு அதிகமாக ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக உள்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் நிதி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புனரமைக்கப்பட்ட 8 ரெயில் நிலையங்களை திறந்து வைத்துள்ளேன். பெங்களூரு- சென்னை, ஐதராபாத்-சென்னை இடையில் புல்லட் ரெயில் திட்டங்கள் வர உள்ளது” என்பதையும் குறிப்பிட்டு பேசினார்.
2047-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியரும் வளர்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்ப உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு ஒரு முக்கியப் பங்கை வகிக்கும் என்று பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்தார்.






