பெரம்பலூர் அருகே ரவுடி வெள்ளை காளியை அழைத்துச் சென்ற போலீசாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி அழகுராஜா போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

வெள்ளை காளி-க்கு போட்ட ‘ஸ்கெட்ச்’

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை வழக்கு விசாரணைக்காகப் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார். பின்னர் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் திருமாந்துறை டோல்கேட் அருகே வண்டியை நிறுத்தி ஹோட்டலில் உணவருந்தினார்.
உணவகத்தின் வெளியே போலீசார் காவலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இரு கார்களில் வந்த கும்பல், உணவகத்தின் மீது அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசியது.


தீவிர தேடுதல் வேட்டை:-

தொடர்ந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெள்ளை காளியை வெட்டுவதற்கும் முயற்சி செய்துள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சுதாரித்து செயற்பட்டு, நாட்டு குண்டு வீசியவர்களை பிடிக்க முயன்ற போது, அவர்கள் காரில் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து காவல் துறையினர் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.

ரவுடி என்கவுண்டர்

இந்நிலையில், பெரம்பலூர் விருமந்துறை அருகே குற்றவாளியான ரவுடி “பொட்டி ராஜா” என்ற அழகுராஜா தலைமறைவாக இருப்பதாக காவல்துறையிலிருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ரவுடி அழகுராஜாவை பிடிக்க முயன்றனர். அப்போது, அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற அழகுதுரையை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

போலீசாரின் தகவல்

வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய சென்ற போது தப்பி ஓட முயன்றுள்ளார். உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயற்சித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.