இந்திய விடுதலைக்கு முதல் வீர முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு விருதுநகர் மாவட்டம் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது.


அநலத வகையில், விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ராஜபாளையம் அருகே N.புதூர் பகுதியில் உள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அவரது திருவுருச்சிலைக்கு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராஜபாளையம் மாரியப்பன், வெம்பக்கோட்டை மணிகண்டன், பல்க் முனியசாமி, சாத்தூர் குருசாமி, முன்னாள் கவுன்சிலர் கவிதா மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

-செய்தியாளர்:காளிராஜ்