தேர்தல் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டு, சர்வதாரணமாக சிரித்துக் கொண்டே ஓ.பன்னீர்செல்வம் சென்று விட்டார்.

முடியே முடியாது – இபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, தினகர் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால், ஓ பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

விஜய் – ஓபிஎஸ் இணைவது..?

தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறா? அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் வலுத்துள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம், தேர்தல் நிலைபாடு பற்றி கேட்ட கேள்விக்கு, “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று சாதாரணமாக பதிலளித்தார்.

தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளிக்காமல் ஓ.பி.எஸ் சென்றுவிட்டார்.